2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ரிசர்வ் வங்கியானது மெய்நிகர் நாணயம் அல்லது பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் இருந்து வங்கி மற்றும் நிதியியல் சேவை நிறுவனங்களைத் தடை செய்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையானது நாட்டின் வர்த்தகத்தில் தலையிடுவதன் மூலம் சட்டத்தை மீறுகின்ற காரணத்தினால் உச்ச நீதிமன்றம் தற்பொழுது மெய்நிகர் நாணயங்களைக் கொண்டு வர்த்தகத்தை (தடை நீக்கம்) மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
மெய்நிகர் நாணயங்கள் என்பது ஒரு டிஜிட்டல் நாணயமாகும். இதற்கான குறியாக்க நுட்பங்கள் அதன் பயன்பாட்டை ஒழுங்கு படுத்துவதற்கும் அதனை வெளியிடுவதை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
இது எந்தவொரு வங்கி, அரசு அல்லது மையப்படுத்தப்பட்ட நிதி அதிகாரிகளால் கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ முடிவதில்லை.