TNPSC Thervupettagam

பாரத் டாக்ஸி கூட்டுறவு வாடகைக்கார் சேவை

February 8 , 2026 9 days 59 0
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான சவாரி முன்பதிவு தளமான பாரத் டாக்ஸியைத் தொடங்கி வைத்தார்.
  • இது 2002 ஆம் ஆண்டு பல்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டு, ஜூன் 6, 2025 அன்று நிறுவப்பட்டது.
  • இந்தத் தளம், சாரதிகள் என்று அழைக்கப்படும் ஓட்டுநர்களை உரிமை மற்றும் செயல்பாடுகளின் மையமாகக் கொண்டு, சுரண்டல் நிறைந்த இணையவழி ஒருங்கிணைப்பாளர் மாதிரிகளைச் சார்ந்திருக்கும் நிலையை நீக்குகிறது.
  • பாரத் டாக்ஸியானது தரகு கட்டணமில்லாத மற்றும் நெரிசல் நேர கூடுதல் கட்டணமற்ற விலைக் கொள்கையில் செயல்பட்டு, லாபத்தை நேரடியாக ஓட்டுநர்களுக்கு விநியோகிக்கிறது.
  • இந்தத் தளம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் விரிவடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்