பாரம்பரிய மருத்துவ அறிவு குறித்த மூன்றாவது பிம்ஸ்டெக் மாநாடு
September 19 , 2026 8 hrs 0 min 20 0
பாரம்பரிய மருத்துவ அறிவு, மரபணு வளங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த மூன்றாவது பிம்ஸ்டெக் மாநாடு கோவாவில் தொடங்கியது.
இந்த மாநாட்டை இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது என்ற நிலையில் கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) இதன் ஒருங்கிணைப்பு நிறுவனமாகச் செயல்படுகிறது.
பாரம்பரிய மருத்துவ அறிவு, மரபணு வளங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த பிம்ஸ்டெக் ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கூட்டத்துடன் இது நடத்தப் படுகிறது.
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான வங்கதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகள் தத்தமது தேசியக் கொள்கைகள், சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பிம்ஸ்டெக் பற்றி
இதன் தலைமைப் பதவிகள் நாடுகளின் பெயர்களின் அகர வரிசைப்படி சுழற்சி முறையில் வழங்கப் படுகின்றன.
இதன் நிரந்தரச் செயலகம் வங்கதேசத்தின் டாக்காவில் அமைந்துள்ளது.
இது தெற்காசியாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு உத்திசார் பிராந்தியப் பாலமாகச் செயல்படுகிறது.
பிம்ஸ்டெக், சார்க் மற்றும் ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்புகளை இணைக்கும் ஒரு உத்திசார் புவியியல் மற்றும் பொருளாதாரப் பாலமாகச் செயல்படுகிறது.