TNPSC Thervupettagam

பிப்ரவா நினைவுச்சின்னங்கள்

January 3 , 2026 4 days 81 0
  • புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் கண்காட்சி டெல்லியில் நடைபெற்றது.
  • அவை புத்தரின் பூதவுடலுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.
  • உத்தரப் பிரதேசத்தின் பிப்ராவாவில், பிரித்தானிய கட்டிடக் கலை பொறியியலாளர் வில்லியம் கிளாக்ஸ்டன் பெப்பே 1898 ஆம் ஆண்டு பிப்ராவா நினைவுச் சின்னங்களைக் கண்டுபிடித்தார்.
  • பெரும்பாலான நினைவுச்சின்னங்கள் பிரித்தானியக் காலனித்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு 1899 ஆம் ஆண்டு கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.
  • இருப்பினும், 1878 ஆம் ஆண்டு இந்தியப் புதையல் சட்டத்தின் கீழ், கண்டுபிடிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கை தக்க வைத்துக் கொள்ள பெப்பே அனுமதிக்கப்பட்டார்.
  • அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், நினைவுச்சின்னங்களின் பகுதிகள் தாய்லாந்து, மியான்மர் மற்றும் இலங்கை போன்ற புத்த மதப் பெரும்பான்மை கொண்ட நாடுகளுக்கு பரிசாக வழங்கப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டில், சுமார் 127 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நினைவுச் சின்னங்கள் இந்தியாவிற்கு நிரந்தரமாகத் திரும்புவதை உறுதி செய்யும் ஓர் ஒப்பந்தம் குறித்து இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்