ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) 2026 ஆம் ஆண்டினை சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் ஆண்டாக அறிவித்துள்ளது.
இது விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் ஆரோக்கியமான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நிலையான மேய்ச்சல் நிலங்களின் மதிப்பை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆனது சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாகவும் (IYWF 2026) அறிவிக்கப் பட்டுள்ளது.
இது விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாலின இடைவெளிகளை நிரப்பவும், உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான பல்வேறு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்.
நிலையான மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஊக்குவிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும், 2026 ஆம் ஆண்டை நிலையான மேம்பாட்டிற்கான சர்வதேசத் தன்னார்வலர்கள் ஆண்டாக (IVY) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.