ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா - விலங்கு நலனில் 60 ஆண்டுகள்
January 6 , 2026 3 days 17 0
கேப்டன் V. சுந்தரம் 1959 ஆம் ஆண்டில் சென்னையின் தியாகராய நகரில் சிக்கித் தவித்த இரண்டு நாய்க்குட்டிகளை மீட்டார்.
அவரும் அவரது மனைவி உஷா சுந்தரமும், காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட விலங்குகளுக்காக வீட்டில் தற்காலிகக் கொட்டில்களைக் கட்டினார்கள்.
இந்த அமைப்பு விலங்கு உதவி சங்கமாகத் தொடங்கி 1964 ஆம் ஆண்டில் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா (BCI) ஆகப் பதிவு செய்யப்பட்டது.
BCI அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர்களில் சுந்தரம், அவரது குடும்பத்தினர் மற்றும் தெய்வசிகாமணி போன்ற ஆரம்பகால ஆதரவாளர்கள் அடங்குவர்.
BCI ஆனது 1964 ஆம் ஆண்டில் தெரு நாய்களுக்கான விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு (ABC) திட்டத்தைத் தொடங்கியது.
உலக சுகாதார அமைப்பு ஆனது 1990 ஆம் ஆண்டில் ABC திட்டத்தின் கீழ் ரேபிஸ் (வெறி நாய்க் கடி நோய்) எதிர்ப்பு தடுப்பூசிக்கு (ABC-AR) ஒப்புதல் அளித்தது.
சென்னை மாநகராட்சிக் கழகமானது 1996 ஆம் ஆண்டில் தெரு நாய்களைக் கொல்வதை நிறுத்தி விட்டு ABC திட்டத்தை ஏற்றது.
இந்திய அரசானது 2001 ஆம் ஆண்டில் விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு (நாய்கள்) விதிகளின் கீழ் நாடு தழுவிய அளவிலான ABC நடவடிக்கையினைக் கட்டாயமாக்கியது.
BCI ஆனது தங்குமிடங்கள், கால்நடைப் பராமரிப்பு, விலங்குகளின் தத்தெடுப்பு இயக்கங்கள் மற்றும் காயமடைந்த அல்லது ரேபிஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப் படும் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.