மக்களவையானது அதன் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்காக பிரஞ்சு மொழியில் ஆரம்ப நிலையிலான ஒரு புதிய பாடப்பிரிவைத் தொடங்கியுள்ளது.
இது ஒன்றிணைக்கப்பட்ட உலகில் பிரஞ்சு மொழியின் அறிவைப் பெறும் முக்கியத்துவத்தைக் கருதி தொடங்கப்பட்டுள்ளது.
இது மக்களாட்சிக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தினால் (PRIDE - Parliamentary Research and Training Institute for Democracy) செயல்படுத்தப்பட உள்ளது.
PRIDE என்பது நாடாளுமன்ற நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகளில் உள்ள நாடாளுமன்றப் பணியாளர்கள், நாடாளுமன்றவாதிகள் மற்றும் பல்வேறு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 1976 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு உள்ளது.