பிரதம மந்திரி ஆத்மநிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா மற்றும் மிஷன் போஷான் 2.0
February 10 , 2021 1618 days 645 0
இந்திய நிதியமைச்சர் மத்திய நிதியுதவியைப் பெறும் இந்த இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். அவை
பிரதம மந்திரி ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா மற்றும்
போஷான் திட்டம் 2.0 ஆகும்.
இது தேசிய சுகாதாரத் திட்டத்தோடுச் சேர்த்து கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆத்ம நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனாவானது கூடுதல் சுகாதாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போஷான் திட்டம் 2.0 திட்டமானது ஊட்டச்சத்து உள்ளடக்கம், விநியோகம் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது போஷான் அபியான் மற்றும் கூடுதல் சத்துணவுத் திட்டத்தை ஒன்றிணைக்கும்.
112 இலட்சிய நோக்கு மாவட்டங்களில் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்த இந்த நோக்கம் முயல்கிறது.