TNPSC Thervupettagam

பிரதமரின் 74வது சுதந்திர தின உரை

August 22 , 2020 1830 days 753 0
  • 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, இந்தியப் பிரதமர் புது தில்லியில் உள்ள செங்கோட்டையிலிருந்து 74வது சுதந்திர தினத்தின் போது புதிய திட்டங்களை அறிவித்தார்.
  • இது அவரது தொடர்ச்சியான 7வது சுதந்திர தின உரையாகும். இவரது உரையானது ஆத்ம நிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா), உள்ளூர் மக்களுக்கான குரல் மற்றும் உலகிற்கு தயாரிப்பதற்காக வேண்டி இந்தியாவில் தயாரிப்போம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.

அறிவிப்புகள்

  • தனிநபர்களின் மருத்துவப் பதிவுகளைப் பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு இந்தியரும் சுகாதார அடையாள அட்டையைப் பெறுவதற்கான தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைத் தொடங்குதல்.
  • லட்சத் தீவுகள் மற்றும் இந்திய நிலப்பகுதியை இணைக்கக் கூடிய ஒளியிழை இணைப்பு.
  • மேலும் இவர் புலிகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்ற வரிசையில்ஓங்கில் பாதுகாப்புத் திட்டத்தைஅறிவித்தார்.
  • மத்திய அரசானது பெண்களின் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயதை மறு ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்தார்.
  • லடாக், லேஹ் மற்றும் கார்கில் பகுதி ஆகியவை மேம்படுத்தப்பட்டு, கரிம சமநிலைப் பகுதியாக அவை அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்