TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி தன்-தான்யா கிருஷி யோஜனா

October 15 , 2025 4 days 33 0
  • இந்தத் திட்டமானது ஆறு ஆண்டுகளுக்கு 24,000 கோடி ரூபாய் என்ற வருடாந்திர நிதி ஒதுக்கீட்டுடன் 100 குறைந்த செயல்திறன் கொண்ட வேளாண் மாவட்டங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • அவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், பயிர்களின் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல், நீர்ப்பாசனம் மற்றும் சேமிப்பை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கான கடன் அணுகலை அதிகரித்தல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
  • இந்தத் திட்டமானது 11 அமைச்சகங்களிலிருந்து தற்போதுள்ள 36 திட்டங்களை ஒன்றிணைப்பதை உறுதி செய்கிறது இதன் மூலம் 1.7 கோடி விவசாயிகள் நேரடியாக பயனடைவார்கள்.
  • இந்தத் திட்டமானது வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளான பழங்கள், மீன் வளம், தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண் காடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இது ஆறு ஆண்டுகளில் 1,44,000 கோடி ரூபாய் முதலீட்டில் வேளாண் வருமானத்தை அதிகரிக்கும், மீள்தன்மை கொண்ட கிராமப்புற வாழ்வாதாரங்களை உருவாக்கும் மற்றும் தன்னிறைவினை ஊக்குவிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்