மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா என்னுமிடத்தில் பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா (PMDK) மையத்தினைத் திறந்து வைத்தார்.
இது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்தரமான, மலிவு விலையிலான உதவி சாதனங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சுமார் 45 PMDK மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த முன்னெடுப்பினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் இந்தியச் செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகம் (ALIMCO) என்ற பிரிவு முன்னெடுத்து நடத்துகிறது.