இந்திய அரசானது, பிரதான் மந்திரி தேசிய கூழ்மப் பிரிப்பு/டயாலிசிஸ் திட்டத்தினை (PMNDP) விரிவுபடுத்தியுள்ளது.
தற்போது இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 751 மாவட்டங்களை உள்ளடக்கியது.
ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,704 டயாலிசிஸ் மையங்கள் செயல்படுகின்றன.
PMNDP இரத்தக் கூழ்மப் பிரிப்பு (ஹீமோ டயாலிசிஸ்) மற்றும் அடிவயிற்றுப் பகுதி கூழ்மப் பிரிப்பு (பெரிட்டோனியல் டயாலிசிஸ்) மூலம் இறுதிக் கட்டச் சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவைகளை வழங்குகிறது.
பிரதான் மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டம் (PMNDP) 2016 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.