வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் தனித்துவ திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி புரோத்சகான் யோஜனா 2019-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அதன் பயனாளிகளின் எண்ணிக்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லான ஒரு கோடி என்ற எண்ணிக்கையைக் கடந்திருக்கின்றது.
இத்திட்டம் 2016-ம் அண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொழிலாளர்களின் சேமநல நிதி நிறுவனத்தின் (Employees’ Provident Fund Organization - EPFO) மூலமாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இத்திட்டத்தின் நேரடியான பயன் என்பது யாதெனில் இத்திட்டத்தின் பயனாளிகளான தொழிலாளர்கள் சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் மரணத்தோடு தொடர்புடைய காப்பீடு ஆகியவற்றின் மூலம் சமூகப் பாதுகாப்பு நன்மைகளை அடைய முடியும்.