வர்த்தகர்கள், கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இதுவரை 34,000க்கும் மேற்பட்டோர் மட்டுமே இணைந்துள்ளதால் இதன் செயல்திறனானது குறைந்து காணப் படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தின் தொலைநோக்கு ஆவணமானது 2019 - 2020 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் பயனாளிகளைச் சேர்ப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.
பிரதான் மந்திரி லகு வியாபாரி மன் - தன் யோஜனா என்பது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.
இந்தத் திட்டமானது 18 - 40 வயதுக்குள் இந்தத் திட்டத்தில் இணைந்தவர்கள், 60 வயதை எட்டிய பின்னர் அவர்களுக்கு மாதாந்திரக் குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியமான ரூ. 3,000 அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.