தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (National Institute of Rural Development and Panchayati Raj - NIRDPR) ஆனது ‘கௌசல் பாரத்’ என்ற பெயரைக் கொண்ட ஒரு நிறுவன வள திட்டமிடல் தளத்தை உருவாக்கியுள்ளது.
இது தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana - DDU-GKY) என்பதின் கீழ் உள்ள திட்டங்களின் தரவுகளைக் கண்காணிக்கவும் தகவல்களை ஒரு அமைப்பில் இணைக்கவும் மாநிலங்களுக்கு உதவுகின்றது.
DDU-GKY
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது DDU-GKY என்ற திட்டத்தினை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 (அந்தியோதயா திவாஸ்) அன்று அறிவித்தது.
DDU-GKY என்பது தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NRLM - National Rural Livelihood Mission) ஒரு பகுதியாகும்.
DDU-GKY இன் குறிக்கோள்கள் பின்வருமாறு:
கிராமப்புற ஏழைக் குடும்பங்களின் வருமானத்தில் பல்வேறு மூல ஆதாரங்களைச் சேர்த்தல் மற்றும்
கிராமப்புற இளைஞர்களின் தொழில் முயற்சிகளை (விருப்பங்களை) பூர்த்தி செய்தல்.