TNPSC Thervupettagam

'பிரதிபா சேது' இணைய தளம்

June 26 , 2025 6 days 63 0
  • பிரதிபா சேது என்பது ஒன்றியக் குடிமைப் பணியாளர் ஆணையத்தினால் (UPSC) தொடங்கப் பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட எண்ணிம தளமாகும்.
  • பிரதிபா சேது என்பது 'தொழில்முறை வளம் மற்றும் திறமை ஒருங்கிணைப்பு – அரசுப் பணி ஆர்வலர்களை பணியமர்த்தச் செய்வதற்கான இணைப்புப் பாதை' என்பதைக் குறிக்கிறது.
  • இது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • தகுதி வாய்ந்த ஆனால் பணிக்குப் பரிந்துரைக்கப்படாத தேர்வர்களின் தனிப்பட்ட சுய விவரங்களைப் பகிர்ந்து கொள்வதை மிகவும் எளிதாக்குவதன் மூலம் திறமைக்கும் வாய்ப்புக்கும் இடையிலான ஒரு இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தேர்வர் சுயவிவரங்கள் ஆனது அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலாளிகளுக்கு சாத்தியமான பணிச் சேர்ப்புக்காக என அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளன.
  • பிரதிபா சேது என்பது முந்தையப் பொதுத் தகவல் வெளிப்படுத்தல் திட்டத்தின் (PDS) மறுபெயரிடப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
  • பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) முடிவைத் தொடர்ந்து PDS ஆனது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • அந்தத் திட்டத்தின் கீழ் UPSC பரிந்துரைக்கப்படாத ஆனால் விருப்பத்தைக் கொண்டு உள்ள தேர்வர்களின் சுய விவரங்களைப் பொது வெளியில் பகிரத் தொடங்கியது.
  • இப்புதிய தளம் ஆனது, CSE தேர்வு நிலைகளில் தேர்ச்சி பெற்றாலும் இறுதிப் பட்டியலில் இடம் பெறாத தேர்வர்களுக்கு நவீன திறமை ஒருங்கிணைப்புப் பாலமாக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்