2025 ஆம் ஆண்டானது, இந்தியாவில் பிராந்தியக் கிராமப்புற வங்கிகள் (RRBs) நிறுவப் பட்டதன் 50 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
இந்தியாவின் கிராமப்புற மற்றும் வேளாண் துறைகளுக்கு அணுகக்கூடிய வங்கி மற்றும் கடன் சேவைகளை வழங்குவதற்காக 1975 ஆம் ஆண்டில் RRB வங்கிகள் உருவாக்கப் பட்டன.
இந்திரா காந்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், கிராமப்புறக் கடன் தொடர்பான நரசிம்மன் குழுவின் பரிந்துரைகளின் பேரில் இது நிறுவப் பட்டது.
இந்தியாவில் தற்போது 43 RRB வங்கிகள் வெவ்வேறு நிதி வழங்கீட்டு வங்கிகளின் கீழ் இயங்குகின்றன என்பதோடு, இவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் NABARD ஆகியவற்றினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன.