TNPSC Thervupettagam

பிரிக்ஸ் தரநிலைப் படுத்தல் கூட்டம்

July 19 , 2026 8 days 57 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமையின் கீழ் பிரிக்ஸ் தேசிய தரநிலை அமைப்புகளின் (NSBs) தலைவர்களின் 5வது கூட்டத்தை இந்தியா பெங்களூரில் நடத்தியது.
  • பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே தரநிலைப்படுத்தலில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் தரநிலைப்படுத்தல் தொடர்பான பிரிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) இறுதி செய்வது ஆகியவற்றுக்கு இந்தக் கூட்டம் முக்கியத்துவம் அளித்தது.
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் பகிர்வு, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் தேசியத் தர அமைப்பான இந்தியத் தர நிர்ணய அமைப்பானது (BIS) நாட்டின் தரநிலைப்படுத்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கிறது.
  • பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்