பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023
September 19 , 2023 701 days 485 0
1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக இந்த 54 ஆண்டுகாலச் சட்டத்தினை திருத்தியமைப்பதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் மாநில மற்றும் தேசிய அளவிலான தரவுத்தளத்தை உருவாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இச்சட்டம் அமலுக்கு வர உள்ளது.
கல்வி நிறுவனத்தில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமணப் பதிவு அல்லது அரசுப் பணி நியமனம் போன்றவற்றிற்கு ஒரே ஆவணமாகப் பிறப்புச் சான்றிதழை பயன்படுத்த இது வழி வகுக்கிறது.
இது தத்தெடுக்கப்பட்ட, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்ட, வாடகைத்தாய் முறை மூலம் பெறப்பட்ட குழந்தை மற்றும் தனி ஒரு பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தை ஆகியோரின் தகவலைப் பதிவு செய்யும் செயல்முறையை எளிதாக்குகிறது.
பேரிடர் அல்லது பெருந்தொற்றுகள் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இறப்புகளை விரைவாகப் பதிவு செய்வதற்கும் சான்றிதழ்களை வழங்குவதற்கும் சிறப்பு "துணைப் பதிவாளர்களை" நியமிப்பதற்கு இது வழி வகுக்கிறது.