பீகாரில் உள்ள கோகுல் ஜலஷே (பக்சர்) மற்றும் உதய்பூர் ஜீல் (மேற்கு சம்பாரன்) ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் ராம்சர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
இந்தச் சேர்த்தல்களுடன், இந்தியா தற்போது 93 ராம்சர் தளங்களைக் கொண்டு உள்ளதுடன், ஆசியாவில் முதலிடத்திலும், உலகளவில் ஐக்கியப் பேரரசு (176) மற்றும் மெக்ஸிகோ (144) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இவை இரண்டும் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தை ஆதரிப்பதோடு வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும் உதவுகின்றன என்ற நிலையில் இவை மீன்பிடித்தல், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் மூலம் வாழ்வாதாரத்தினை வழங்குகின்ற குதிரைக் குளம்பு வடிவ ஏரிகள் ஆகும்.
உதய்ப்பூர் ஜீல் ஏரியில் 280க்கும் மேற்பட்ட தாவர இனங்களையும், எளிதில் பாதிக்கப் படக் கூடிய களியன் உட்பட 35 வலசை போகும் பறவை இனங்களையும் கொண்டு உள்ளது என்ற நிலையில் கோகுல் ஜலஷே வெள்ளத் தடுப்பானாகச் செயல்படுகிறது.