TNPSC Thervupettagam

புதிய உயர் நீதிமன்ற அமர்வு – லடாக்

October 20 , 2026 2 days 85 0
  • கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லே (Leh) பகுதியில் லடாக் ஒன்றியப் பிரதேசம் ஓர் உயர் நீதிமன்ற அமர்வைப் பெற்றுள்ளது.
  • இந்த அமர்வு 1928 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்திற்குச் சொந்தமானதாகும்.
  • லடாக் 2019 ஆம் ஆண்டில் ஒரு தனி ஒன்றியப் பிரதேசமாக மாறியது, அதன் பிறகு உயர் நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் என மறுபெயரிடப்பட்டது.
  • லடாக்கின் தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதை இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போதிய வசதிகள் கிடைத்தவுடன் காணொளி காட்சி மூலம் ஒரே நாளில் லடாக்கின் விவகாரங்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்