TNPSC Thervupettagam

புதிய ஊசித்தும்பி இனம் - லெஸ்டெஸ் பலோட்டி

July 24 , 2026 4 days 40 0
  • கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அறிவியலாளர்கள் 'லெஸ்டெஸ் பலோட்டி' (Lestes paloti) என்ற புதிய பரந்த இறக்கைகளைக் கொண்ட ஊசித்தும்பி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • ஓடோனாட்டா வரிசையின் கீழ் உள்ள லெஸ்டிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்த லெஸ்டெஸ் பலோட்டிக்கு இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) டாக்டர் முகம்மது ஜாபர் பலோட் என்பவரின் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த இனம் கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இது செம்புரைக்கல் குன்றுகள் மற்றும் புதர் தாவரப் பகுதிகளில் வாழ்கிறது.
  • இது ஒரு தனித்துவமான பருவகால நிறமாற்றத்தைக் காட்டுகிறது, வறண்ட காலங்களில் பழுப்பு நிறத்திலும் மற்றும் பருவமழையின் போது நீல நிறத்திலும் காட்சியளிக்கிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கடைசியாக லெஸ்டெஸ் இனம் விவரிக்கப்பட்ட 97 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளதுடன் இது கேரளாவின் தும்பி இனங்களின் (தட்டான் மற்றும் ஊசித்தும்பிகள்) பன்முகத்தன்மையை 192 ஆக உயர்த்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்