TNPSC Thervupettagam

புதிய காங்கிரஸ் தலைவர்

October 25 , 2022 1010 days 474 0
  • கர்நாடகாவின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது போட்டியாளரான கேரளாவினைச் சேர்ந்த சசி தரூரைத் தோற்கடித்துள்ளார்.
  • 24 ஆண்டுகளில் காந்தியக் குடும்பத்தைச் சாராத முதல் காங்கிரஸ் தலைவர் இவர் ஆவார்.
  • கடந்த 40 ஆண்டுகளில் பழம்பெரும் இந்த அமைப்பின் முதல் பட்டியலினச் சாதியினர் பிரிவினைச் சேர்ந்த தலைவர் இவர் ஆவார்.
  • இது கடந்த 22 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான முதல் தேர்தல் மற்றும் அக்கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது பெரிய போட்டியாகும்.
  • 1939 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவருக்கான முதல் தேர்தல் நடத்தப் பட்டது.
  • அதில் மகாத்மா காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமைய்யா நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் தோல்வி அடைந்தார்.
  • இந்த தேர்தலில் 9,500 கட்சி பிரதிநிதிகள் வாக்களித்தனர்.
  • கார்கே 7,897 வாக்குகளும், தரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்