TNPSC Thervupettagam

தொடர்பு மற்றும் நம்பிக்கைக் கட்டமைப்பு நடவடிக்கைகளின் மாநாடு

October 24 , 2022 1011 days 601 0
  • கஜகஸ்தானின் ஆஸ்தானாவில் ஆசியாவில் மேற்கொள்ளப்படும் தொடர்பு மற்றும் நம்பிக்கைக் கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்த 6வது உச்சி மாநாடானது (CICA) நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • தொடர்பு மற்றும் நம்பிக்கைக் கட்டமைப்பு நடவடிக்கைகளின் மாநாடு என்பது ஆசியாவில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான மன்றமாகும்.
  • 1992 ஆம் ஆண்டில் கஜகஸ்தானின் முதல் அதிபர் நர்சுல்தான் நசர்பயேவ் என்பவரால் இந்த அமைப்பை உருவாக்குவதற்கான கருத்தானது முதலில் முன்வைக்கப் பட்டது.
  • இதன் முதல் உச்சி மாநாடானது 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றது.
  • இந்த அமைப்பின் உறுப்பினர்களில் 27 ஆசிய நாடுகள், ஒன்பது பார்வையாளர் நாடுகள் மற்றும் ஐந்து சர்வதேச அமைப்புகளும் அடங்கும்.
  • இதன் செயலகம் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அல்மாட்டியில் (கஜகஸ்தான்) அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்