TNPSC Thervupettagam

புதிய தொழிலாளர் கணக்கெடுப்பு கட்டமைப்பு

October 27 , 2026 12 days 113 0
  • வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும் பணிகள், ஊதியமில்லா வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள், தன்னார்வப் பணிகள் மற்றும் பயிற்சியாளர் பணிகளைச் சிறந்த முறையில் கணக்கிடுவதற்காக 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வருடாந்திர தொழிலாளர் படை கணக்கெடுப்பை (PLFS) மத்திய அரசு மாற்றியமைக்க உள்ளது.
  • புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) கணக்கெடுப்பு வடிவமைப்பு மற்றும் அட்டவணையை மாற்ற உள்ளது.
  • ஒரு தனி இரண்டாம் கட்ட அடுக்கு (Second Stage Stratum - SSS) குறைந்தது ஒரு வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும் தொழிலாளரைக் கொண்ட குடும்பங்களை அடையாளம் காண்பதுடன் இது வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும்  தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேம்படுத்தும்.
  • சமைத்தல், சுத்தம் செய்தல், குழந்தை பராமரிப்பு மற்றும் முதியோர், நோயுற்றோர் அல்லது மாற்றுத்திறனாளிகளைப் பராமரித்தல் உள்ளிட்ட ஊதியமில்லா வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த கேள்விகள் இக்கணக்கெடுப்பில் சேர்க்கப்படும்.
  • முன்னதாக PLFS-இல் தனியாகப் பதிவு செய்யப்படாத சொந்த-பயன்பாட்டு உற்பத்தி, தன்னார்வப் பணி மற்றும் ஊதியமில்லா பயிற்சியாளர் பணி ஆகியவையும் இதில் பதிவு செய்யப்படும்.
  • மக்கள் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தவும், மாதிரித் தேர்வை மிகவும் திறமையானதாக மாற்றவும் மாதிரி ஒதுக்கீடு மற்றும் அடுக்காக அமைத்தல் ஆகியவை புதுப்பிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்