ரஷ்ய நாடானது, சுமார் 10 புதிய சிர்கான் மீயொலி சீர்வேக ஏவுகணைகளை போர்க் கப்பலிலிருந்தும் மற்ற இரண்டு புதிய ஏவுகணைகளை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவி வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
சிர்கான் ஏவுகணையானது ஒலியை விட 9 மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் திறனும், 1000 கிலோமீட்டர் (620 மைல்கள்) தூர வரம்பும் உடையதாகும்.