விதை தரச் சான்றிதழ் மற்றும் இயற்கை முறை வேளாண் சார் சான்றிதழ் துறை ஆனது, கான்பூர் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட புதிய வகை பருப்பு விதைகளைச் சீர்படுத்தியுள்ளது.
மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்கள் குறித்த அச்சம் இல்லாமல், பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடியை மேற்கொள்வதற்கு வேண்டி விவசாயிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
LGG 600 எனும் பச்சைப் பயறு வகையானது, நன்றாக வளர்ந்து 28வது நாளில் சீரான வளர்ச்சியுடன் பூக்கும் நிலையை எட்டியுள்ளது.
கோட்டா 5 என்ற உளுந்துப் பயறு வகையானது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகக் கண்டறியப் பட்டது.