TNPSC Thervupettagam

புனஹ் பரன் அலைபேசி செயலி

November 6 , 2026 15 hrs 0 min 49 0
  • இந்தியா முழுவதும் அறிவியல் பூர்வமான நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டமிடலை வலுப்படுத்துவதற்காக 'புனஹ் பரன்' அலைபேசி செயலி மற்றும் அதன் இணையதளத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
  • இது செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டலை (ARS) கிராம அளவில் திட்டமிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புவியியல் முடிவு-ஆதரவு செயலையாகும்.
  • பாஸ்கராச்சார்யா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி-தகவலியல் தேசிய நிறுவனம் (BISAG-N) மற்றும் தேசிய நீர் திட்டம் (NWM) ஆகிய இரண்டும் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளன.
  • இது பயனரின் இருப்பிடத்திலிருந்து 3-கிமீ சுற்றளவுக்குள் நிலத்தடி நீர் செறிவூட்டக்கூடிய பகுதிகளை அடையாளம் காண்கிறது.
  • உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் தடுப்பணைகள், செறிவூட்டல் கிணறுகள், கசிவுநீர்க் குட்டைகள் மற்றும் உட்செலுத்துக் கிணறுகள் போன்ற பொருத்தமான கட்டமைப்புகளை இது பரிந்துரைக்கிறது.
  • மழையளவு, நிலத்தடி நீர் மட்டம், நீர்நிலை வளம், நிலச் சரிவு மற்றும் வடிகால் வலையமைப்புகள் போன்ற பல்வேறு புவியியல் தரவுகளை ஒருங்கிணைத்து இடங்களைத் தேர்வு செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்