வடக்கு திரிபுராவில் புரு அகதிகளால் தொடங்கப்பட்ட முற்றுகையானது அகற்றப் பட்டது.
தங்களுக்கான உணவுப் பொருள் வழங்கலை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகமானது சுமார் 30,000 புரு இன மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க முடிவு செய்தது.
இந்த புரு இன மக்கள் 1997 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சில சமூகங்களுக்கு இடையிலான ஒரு வன்முறையை அடுத்து மிசோரமில் இருந்து திரிபுராவுக்குத் தப்பி ஓடி விட்டனர்.
இது தொடர்பாக, மத்திய அரசு, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகியவற்றிற்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இந்த ஆண்டின் வாக்காளர் பட்டியலைத் திருத்தி, அம்மாநிலத்திற்குள் இடம்பெயர்ந்த சமூகத்தின் உறுப்பினர்களை அப்பட்டியலில் சேர்க்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் இப்போது மிசோரம் மாநிலத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
புரு பழங்குடியினர்
இந்தியாவில் திரிபுரா மாநிலம் முழுவதும் புரு பழங்குடியின மக்களைக் காணலாம். இருப்பினும், மிசோரம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் அவர்களைக் காணலாம்.
இவர்கள் திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த புரு மொழியின் ரீங் பேச்சு வழக்கில் பேசுகின்றார்கள். மேலும் இது உள்நாட்டில் கௌ புரு என்று குறிப்பிடப் படுகின்றது.