சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான “தற்பொழுது இந்தியப் புலம்பெயர்வு” (India Migration Now) என்ற நிறுவனமானது “மாநிலத்திற்கு இடையேயான புலம்பெயர்வு கொள்கைக் குறியீடு” என்ற ஒரு குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
இந்தக் குறியீடானது மாநிலத்திற்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர்களின் ஒருங்கிணைப்பை அளவிடுகின்றது.
இந்தக் குறியீட்டின்படி, கேரளா, கோவா, இராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் மிகவும் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களாகும்.
மறுமுனையில் தில்லியானது மாநிலத்திற்கு இடையேயான குறைந்த புலம்பெயர் கொள்கைக் குறியீட்டைக் கொண்டுள்ளது.