தரைப்படை கடற்படை மற்றும் விமானப்படை அனைத்தும் இணைந்த இந்தியாவின் ராணுவப் படைகளானது அந்தமான் நிக்கோபார் பகுதியின் தெரசா தீவில் புல் ஸ்ட்ரைக் (Exercise Bull Strike) எனும் கூட்டுப் பயிற்சியை நடத்தியது.
இப்பயிற்சியானது தற்போது நாடு எதிர்கொள்ளும் முக்கியப் பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் அவர்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும் முப்படைகளின் கூட்டு நடவடிக்கைத் திறன்களை வெளிப்படுத்துவதையும் மற்றும் அதன் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.