2022–2023 ஆம் ஆண்டில் 260 ஆக இருந்த தமிழ்நாட்டின் வல்லநாடு சரணாலயத்தில் உள்ள புல்வாய்களின் (ஆன்டிலோப் செர்விகாப்ரா) எண்ணிக்கை, 2023–2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 300 ஆக அதிகரித்துள்ளது.
1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வல்லநாடு சரணாலயம், சுமார் 1,641 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்ற நிலையில்இது 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அருகி வரும் புல்வாய்களுக்கான இயற்கை வாழ்விடமாகும்.
தமிழ்நாடு பல்லுயிர் வளங்காப்பின் கீழான புல்வெளி மீளுருவாக்கம் மற்றும் பருவ நிலை மாற்ற எதிர் நடவடிக்கைகளுக்கான பசுமையாக்கத் திட்டத்தின் (TBGPCCR) கீழ் சுமார் 50 ஹெக்டேர் பரப்பிலான பூர்வீக புல் இனங்களை மீளுருவாக்கியுள்ளது என்ற நிலையில்இது புல்வாய்களின் வாழ்விட நிலைமைகளை மேம்படுத்துகிறது.
இந்தச் சரணாலயத்தில் 300 புள்ளி மான்கள், 150 சம்பார் மான்கள் உள்ளன.
புல்வாய் (ஆன்டிலோப் செர்விகாப்ரா) IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலால் உலக அளவில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் வல்லநாடு கிராமத்தில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மலையில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் தெற்கே உள்ள இடமாகும் என்ற நிலையில்அங்கு இயற்கையாகவே புல்வாய் மான்கள் வசிக்கின்றன.