பூஜ்ஜிய இருப்பு மகளிர் சுய உதவிக் குழு சேமிப்புக் கணக்கு – IPPB
May 6 , 2026 88 days 209 0
ஊரக இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுய உதவிக் குழுக்களுக்காக (SHGs) பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கை இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB) அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களை இலக்காகக் கொண்டது மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை, கணக்கு தொடங்கும் வைப்புத்தொகை கிடையாது, கணக்கினை மூடுவதற்கான கட்டணங்கள் இல்லை, மற்றும் அதிகபட்ச இருப்பு வரம்பு ₹2 லட்சம் ஆகும்.
இதன் மூலம் சுய உதவிக் குழுக்கள் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT), டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் முறையான கடன் வசதிகளை அணுக முடியும்.
இது முறைசாரா கடன் முறைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஊரக குழுக்களிடையே முறையான சேமிப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது.