பெண்களால் மட்டுமே இயக்கப்படும் வாடகை மகிழுந்துச் சேவை
February 3 , 2020 2027 days 765 0
புது தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ‘வுமன் வித் வீல்ஸ்’ என்ற வாடகை மகிழுந்துச் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
இது பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சாகா வாடகை மகிழுந்து’ என்ற அமைப்பினால் இயக்கப் படுகின்றது.
இந்த வாடகை மகிழுந்துகள் மகளிர் ஓட்டுநர்களால் இயக்கப்படுகின்றன. இந்தச் சேவையானது பெண்கள் அல்லது குடும்பத்துடன் உள்ள ஆண்களுக்கு மட்டுமே வழங்கப் படுகின்றது.
இந்த வாடகை மகிழுந்தானது மகளிர் ஓட்டுநர்கள் மற்றும் மகளிர் பயணிகளுக்கு உதவுவதற்காக புவியிடங் காட்டி மற்றும் அவசரகால பொத்தானுடன் நிறுவப் பட்டுள்ளது.