பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்புக் (WEE) குறியீடு உத்தரப் பிரதேச அரசாங்கத்தினால் தொடங்கப்பட்டது.
இது வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்முனைவு, வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய ஐந்து பொருளாதாரத் துறைகளில் பெண்களின் பங்களிப்பைக் கண்காணிக்கிறது.
திறன் சார் திட்டங்களின் சேர்க்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள், மேலும் அவர்கள் கடன் பெறுவதற்கான குறைந்த அணுகலுடன் பதிவு செய்யப்பட்ட தொழில்முனைவோரின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இந்தக் குறியீடு உத்தரப் பிரதேசத்தின் போக்குவரத்துத் துறையில் பாலின ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டுகிறது, இது பெண்களுக்கானப் பணி சேர்ப்பு உத்திகளை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற கொள்கைச் சீர்திருத்தங்களுக்கு வழி வகுக்கிறது.
இந்தியாவின் பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் 41.7% ஆக உள்ளது, ஆனால் வேலை செய்யும் பெண்களில் 18% மட்டுமே முறையான (அதிகாரப்பூர்வ) வேலை வாய்ப்புகளில் உள்ளனர்.
இந்தியாவின் பாலின இடைவெளியைக் குறைக்கவும், பயனுள்ள கொள்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சீர்திருத்தங்களை வழி நடத்தவும் அனைத்து துறைகளிலும் பாலின ரீதியாகப் பிரிக்கப்பட்ட தரவு அவசியமாகும்.
ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா போன்ற டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார இலக்குகளைக் கொண்ட மாநிலங்கள், உள்ளடக்கிய வளர்ச்சிக்காக WEE குறியீட்டுக் கட்டமைப்பைப் பயன்படுத்தலாம்.