பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்திய அறிவியல் மாநாட்டின் (Indian Science Congress - ISC) ஒரு பகுதியாக 9வது மகளிர் அறிவியல் மாநாடானது (Women Science Congress - WSC) ஏற்பாடு செய்யப்பட்டது.
அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியில் பாலின வேறுபாடு காணப்படுவதால் பெண்கள் எதிர்கொள்ளும் இடையூறுகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டியுள்ளது.
இந்திய அறிவியல் மாநாட்டுச் சங்கமானது இந்தியாவின் முதன்மையான அறிவியல் அமைப்பாகும். இதன் தலைமையகம் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
இந்த மாநாட்டின் முதலாவது கூட்டமானது 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆசியச் சங்கத்தின் வளாகத்தில் நடைபெற்றது.