TNPSC Thervupettagam

பென்னு குறுங்கோளில் சர்க்கரை மூலக்கூறுகள்

December 7 , 2025 5 days 64 0
  • நாசாவின் OSIRIS-REx (Origins, Spectral Interpretation, Resource Identification, Security-Regolith Explorer) விண்கலம் ஆனது 2023 ஆம் ஆண்டில் பென்னு குறுங்கோளில் இருந்து சேகரித்த மாதிரிகளைப் புவிக்கு திருப்பி அனுப்பியது.
  • அதில் ஆற்றலாகப் பயன்படுத்தப்படும் ஆறு கார்பன் மூலக்கூறு கொண்ட சர்க்கரையான குளுக்கோஸை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
  • ரைபோ நியூக்ளிக் அமிலத்திற்கு (ஆர்.என்.ஏ) அவசியமான ஐந்து கார்பன் மூலக்கூறு கொண்ட சர்க்கரையான ரைபோஸும் இதில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அடையாளம் காணப்பட்ட பிற கரிம சேர்மங்களில் அமினோ அமிலங்கள், நியூக்ளியோபேஸ்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் அடங்கும்.
  • டி.என்.ஏவில் உள்ள சர்க்கரையான டி ஆக்ஸிரைபோஸ் (டி ஆக்ஸிரைபோ நியூக்ளிக் அமிலம்) இதில் கண்டறியப்படவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்