ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் பிரான்ஸ் மற்றும் பிரெஸ்ட் ஆகியவை இணைந்து ஒரு பெருங்கடல் உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்தன.
பெருங்கடல் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் குழு சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டின் உயர்மட்டக் குழு சந்திப்பில் உரையாற்றுவார்கள்.
வளமான மற்றும் நிலையான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் அதற்கான ஆதரவுகளை வழங்குவதற்குமான சில உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சர்வதேசச் சமூகத்தை அணி திரட்டச் செய்வதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் ஆகும்.