மாநிலத்தில் ஒரு பொதுவான சிவில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அசாம் சட்டமன்றம் பொது சிவில் சட்ட (UCC) மசோதா, 2026-ஐ நிறைவேற்றியது.
இந்த மசோதாவானது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் சேர்ந்து வாழும் உறவுகளின் பதிவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (STs) வழக்கமான சட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், இந்த சட்டத்தின் விதிகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
இந்த சட்டம் பாலின நீதியை ஊக்குவிக்கும், பலதார மணத்தை தடை செய்யும் மற்றும் சமமான வாரிசு உரிமைகளை உறுதி செய்யும்.
உத்தரகாண்ட் மற்றும் குஜராத்திற்குப் பிறகு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலமாக அசாம் மாறியுள்ளது.