இந்தியாவின் முதல் தண்ணீர் தொடர்பான தேசிய AI மற்றும் டிஜிட்டல் உச்சிமாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த உச்சி மாநாட்டை பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) மற்றும் Elets Technomedia பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்வானது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நகர்ப்புற நீர் மேலாண்மை, திறன் உள்கட்டமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
SCADA, புவியியல் தகவல் அமைப்பு (GIS) வரைபடமாக்கல், பொருட்களின் இணையம் (IoT) சார்ந்த டேங்கர் கண்காணிப்பு மற்றும் திறன்சார் அளவீடு போன்ற டிஜிட்டல் அமைப்புகளை BWSSB காட்சிப்படுத்தும்.
எதிர்கால நகர்ப்புற நீர் நிர்வாகம் மற்றும் பருவநிலையைத் தாங்கும் நீர்ப் பாதுகாப்பிற்கான "ஐந்து பஞ்ச சூத்திரங்கள்" கட்டமைப்பை இந்த உச்சி மாநாடு முன் வைக்கிறது.