பொது நிறுவன வளாகங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுதல்
November 10 , 2025 64 days 100 0
பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற பொது நிறுவன வளாகங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.
நாய்கள், நியமிக்கப்பட்ட காப்பிடங்களுக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டு விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு (ABC) விதிகளின் கீழ் கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனமும் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புக்காக என்று ஒரு முதன்மை அதிகாரியை நியமிக்க வேண்டும் மற்றும் வேலி அல்லது பாதுகாப்பான வளாகங்களை உறுதி செய்ய வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள், அவற்றின் அகற்றல் நடவடிக்கைகளை முடித்து அதற்கான இணக்க அறிக்கைகளை 8 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாய்க்கடி சம்பவங்களைத் தடுப்பதும், விலங்கு நலத் தரங்களைப் பேணுவதோடு குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதுமே இந்த வழிகாட்டுதல்களின் ஒரு நோக்கமாகும்.