சுவச் பாரத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் தற்போது கூகுள் வரைபடங்கள் நாடு முழுவதிலும் 2300 நகரங்களில் இருக்கும் 57,000 பொதுக் கழிப்பிடங்களைப் பட்டியலிட்டு இருக்கின்றது.
அந்நிறுவனம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின நினைவை முன்னிட்டு இதனை அறிவித்திருக்கின்றது.
கூகுள் வரைபடத்தில் பொதுக் கழிப்பிடங்களை இணைப்பது, ஆரம்பத்தில் 2016 ஆம் ஆண்டில் ஒரு சோதனை முயற்சியாக புது தில்லி, போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டது.
கூகுள் நிறுவனமானது சுவச் பாரத் திட்டத்துடனும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடனும் இதற்காக கூட்டு சேர்ந்துள்ளது.