தென் அமெரிக்காவில் உள்ள ஒரு செயலற்ற எரிமலையானது பல தசாப்தங்களாக வெடிப்பதற்கான சாத்தியமான அறிகுறிகளைக் கொண்டிருந்ததற்கான மர்மத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொலிவியாவின் ஆண்டிஸ் மலைகளில் அமைந்துள்ள உடுருங்கு என்ற ஒரு செயலற்ற எரிமலையானது கடந்த 250,000 ஆண்டுகளாக வெடிக்கவில்லை.
1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, அந்த எரிமலை அமைப்பின் மையத்தில் உள்ள நிலம் உயர்ந்து, அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகள் கீழமுங்கி வருவதால், உடுருங்குவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு ஆனது "சோம்ப்ரெரோ" வடிவத்தில் சிதைந்து விட்டதாகத் தெரிகிறது.
கடந்த 50 ஆண்டுகளில், மைய உயர்வு ஆண்டுக்கு 0.4 அங்குலங்கள் வரை உயர்ந்து வருகிறது.
அதிர்வொலி மற்றும் அமைதியின்மைக்கான பிற அறிகுறிகள் ஆனது பள்ளத்தின் அடிப்பகுதியில் திரவம் மற்றும் வாயுவின் இயக்கத்தின் காரணமாக ஏற்படும் ஒரு விளைவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்தனர்.
உடுருங்கு ஆனது புவியின் மேலடுக்கில் உள்ள உலகின் மிகப்பெரிய அறியப்பட்டப் பாறைக் குழம்பு அமைப்பிற்கு மேலே அமைந்துள்ளது.