May 26 , 2022
1085 days
516
- மொசாம்பிக் நாட்டில் ஒரு குழந்தைக்கு இந்த நோய்ப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, தீவிர போலியோ வைரஸ் முதல் வகையின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- இது 1992 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் பதிவான முதல் பாதிப்பாகும்.
- மேலும், இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டில் இருந்து தொற்றிய இரண்டாவது தீவிர போலியோ வைரஸ் பாதிப்பும் இதுவே ஆகும்.
- இன்றைய நிலவரப்படி, தீவிரமான போலியோ வைரஸ் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளது.
- போலியோ வைரசில் 1 முதல் 3 என்ற எண் முறையில் பெயரிடப்பட்டுள்ள மூன்று வகைகள் உள்ளன.
- ஒரு நாடு போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட வேண்டுமானால், மூன்று வகையான தீவிரமான போலியோ வைரஸ்களின் பரவல்களும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
- போலியோ வைரஸினை ஒழிப்பதற்கு, தீவிரமான மற்றும் தடுப்பூசி மூலம் தூண்டப் பட்ட போலியோ நோய்த் தொற்றின் பாதிப்புகள் சுழியமாகக் குறைக்கப்பட வேண்டும்.
- மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சுழியப் பாதிப்புகள் பதிவானதற்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.

Post Views:
516