TNPSC Thervupettagam

உதவிகர உபகரணத் தொழில்நுட்பம் பற்றிய உலகளாவிய அறிக்கை

May 26 , 2022 1085 days 457 0
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF ஆகியவை இணைந்து உதவிகர உபகரணத் தொழில்நுட்பம் (GREAT) பற்றிய முதல் உலகளாவிய அறிக்கையை வெளியிட்டன.
  • இந்த அறிக்கையானது 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 71வது உலக சுகாதாரச் சபையில் மேற்கொள்ளப்பட்ட, உதவிகர உபகரணத் தொழில்நுட்பத்திற்கான பயனுள்ள அணுகல் குறித்த உலகளாவிய அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தின் இறுதிக் கட்டமாகும்.
  • 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குச் சக்கர நாற்காலிகள், செவித் துணைக் கருவிகள் அல்லது தகவல் தொடர்பு மற்றும் அறிவாற்றல் தொடர்பான உதவிகளை வழங்கும் செயலிகள் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவிகர உபகரணங்கள் தேவைப்படுகின்றன.
  • அவர்களில் ஒரு பில்லியனுக்கும் மேலானவர்களுக்கு இவற்றிற்கான அணுகல் மறுக்கப் படுகிறது.
  • குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், இந்த வாழ்க்கையை மாற்றும் தயாரிப்புகளுக்கான தேவையில் 3 சதவீதத்திற்கும் குறைவான அளவினையே அணுக முடிகிறது.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவிகர உபகரணங்களின் தேவை உள்ளோரின் எண்ணிக்கையானது 2050 ஆம் ஆண்டிற்குள் 3.5 பில்லியனாக உயரும்.
  • உதவிகர உபகரணத் தொழில்நுட்பம் என்பது மாற்றுத்திறனாளிகளின் செயல் பாட்டுத் திறன்களை அதிகரிக்க, பராமரிக்க அல்லது மேம்படுத்தப் பயன்படும் எந்தவொரு பொருள், உபகரணங்கள், மென்பொருள் நிரல் அல்லது தயாரிப்பு அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்