TNPSC Thervupettagam

ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா - விலங்கு நலனில் 60 ஆண்டுகள்

January 6 , 2026 13 hrs 0 min 10 0
  • கேப்டன் V. சுந்தரம் 1959 ஆம் ஆண்டில் சென்னையின் தியாகராய நகரில் சிக்கித் தவித்த இரண்டு நாய்க்குட்டிகளை மீட்டார்.
  • அவரும் அவரது மனைவி உஷா சுந்தரமும், காயமடைந்த மற்றும் கைவிடப்பட்ட விலங்குகளுக்காக வீட்டில் தற்காலிகக் கொட்டில்களைக் கட்டினார்கள்.
  • இந்த அமைப்பு விலங்கு உதவி சங்கமாகத் தொடங்கி 1964 ஆம் ஆண்டில் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா (BCI) ஆகப் பதிவு செய்யப்பட்டது.
  • BCI அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர்களில் சுந்தரம், அவரது குடும்பத்தினர் மற்றும் தெய்வசிகாமணி போன்ற ஆரம்பகால ஆதரவாளர்கள் அடங்குவர்.
  • BCI ஆனது 1964 ஆம் ஆண்டில் தெரு நாய்களுக்கான விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு (ABC) திட்டத்தைத் தொடங்கியது.
  • உலக சுகாதார அமைப்பு ஆனது 1990 ஆம் ஆண்டில் ABC திட்டத்தின் கீழ் ரேபிஸ் (வெறி நாய்க் கடி நோய்) எதிர்ப்பு தடுப்பூசிக்கு (ABC-AR) ஒப்புதல் அளித்தது.
  • சென்னை மாநகராட்சிக் கழகமானது 1996 ஆம் ஆண்டில் தெரு நாய்களைக் கொல்வதை நிறுத்தி விட்டு ABC திட்டத்தை ஏற்றது.
  • இந்திய அரசானது 2001 ஆம் ஆண்டில் விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு (நாய்கள்) விதிகளின் கீழ் நாடு தழுவிய அளவிலான ABC நடவடிக்கையினைக் கட்டாயமாக்கியது.
  • BCI ஆனது தங்குமிடங்கள், கால்நடைப் பராமரிப்பு, விலங்குகளின் தத்தெடுப்பு இயக்கங்கள் மற்றும் காயமடைந்த அல்லது ரேபிஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப் படும் விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்