சமீபத்தில் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வெளியிடப்பட்ட மகப்பேறு இறப்பு விகிதம் (Maternity Mortality Ratio - MMR) குறித்த ஒரு சிறப்பு அறிக்கையின் படி, இந்தியாவின் MMR ஆனது ஒரு ஆண்டில் 8 புள்ளிகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
2014-16 ஆம் ஆண்டுகளில் பிறந்த ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 130 ஆக இருந்த MMR ஆனது 2015-17 ஆம் ஆண்டுகளில் பிறந்த ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 122 ஆக (6.2% சரிவு) குறைந்துள்ளது.
தற்போது கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய இந்தியாவில் உள்ள 11 மாநிலங்கள் இந்த MMR இலக்கை அடைந்துள்ளன.
அசாம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள் MMR இலக்கை அடைவதில் பின்தங்கியுள்ளன.
இலக்குகள்
தேசிய சுகாதாரக் கொள்கை 2017ன் கீழ், 2020 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 100 என்ற MMR இலக்கை அடைய இந்தியா நிர்ணயித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே, அதாவது 5 ஆண்டுகள் முன்கூட்டியே 2025 ஆம் ஆண்டிற்குள் MMR அளவினைக் குறைப்பதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா உள்ளது.
MMR அளவைக் குறைப்பதற்காக மத்திய அரசால் லக்சயா, போஷான் அபியான் மற்றும் சுமன் (சுரக்சித் மத்ரித்வா ஆஷ்வாசன் முன்னெடுப்பு) போன்ற முன்னெடுப்புகள் தொடங்கப் பட்டுள்ளன.