3 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (National Crime Records Bureau - NCRB) 2016 ஆம் ஆண்டிற்கான “விவசாயிகளின் தற்கொலைகள்” குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஆனால் இது முந்தைய பதிப்புகளிலிருந்த “தற்கொலைகளுக்கான காரணங்கள்” என்ற ஒரு முக்கியப் பிரிவை விலக்கியுள்ளது.
சமீபத்திய அறிக்கையானது 2016 ஆம் ஆண்டில் நாட்டில் குறைந்தது 11,379 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றது.
இது ஒவ்வொரு மாதமும் 948 தற்கொலைகள் அல்லது ஒவ்வொரு நாளும் 31 தற்கொலைகள் நிகழ்வதாக கூறுகின்றது.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை நிகழும் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் (2016 ஆம் ஆண்டில் 3,661 விவசாயிகள்) தொடர்ந்து விளங்குகின்றது.
அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துள்ள இரண்டாவது மாநிலம் கர்நாடகா (2016 ஆம் ஆண்டில் 2,079) ஆகும்.
NCRB ஆனது கடன் அல்லது கடன் வாங்குவது மூலமாக ஏற்படும் திவால் ஆகியவற்றின் காரணமாக விவசாயிகளின் தற்கொலைகளை முதன்முறையாக வகைப் படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு 1995 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த தரவுகளை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, 2016 ஆம் ஆண்டுத் தரவுகளுடன் சேர்த்து இந்தியாவில் மொத்தம் 3,33,407 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.