மகப்பேறு கால காயத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2026 - மே 23
May 28 , 2026 66 days 140 0
பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதிக்கும், தடுக்கக்கூடிய பிரசவ கால காயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று மகப்பேறு கால காயத்தை (Obstetric Fistula) ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
மகப்பேறு கால ஃபிஸ்டுலா என்பது உரிய நேரத்திலான மருத்துவ சிகிச்சையின்றி, நீண்ட நேர அல்லது தடைபட்ட பிரசவத்தினால் ஏற்படும் ஒரு தீவிரமான பிரசவ கால காயம் ஆகும்.
இந்நிலை சிறுநீர் அல்லது மலக் கசிவு, நோய்த்தொற்றுகள், உணர்ச்சிப்பூர்வமான அதிர்ச்சி, சமூக தனிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 முதல் 100,000 புதிய மகப்பேறு ஃபிஸ்டுலா பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவற்றில் பல பாதிப்புகள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பதிவாகின்றன.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Restore Her Dignity. Protect Her Future” என்பதாகும்.