மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் ஓர் அங்கமாக மார்ச் 01 ஆம் தேதி முதல் சர்வதேச மகளிர் தின வாரத்தினைக் கொண்டாடுகிறது.
பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றை அடையும் முன்னேற்றப் பாதையைக் கொண்டாடும் நிகழ்வை இது குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டு மார்ச் 03 அன்றையக் கொண்டாட்டங்களுக்கான கருத்துரு, “நாளைய உலகின் பெண்கள்” (Women of Tomorrow) என்பதாகும்.
மார்ச் 08 ஆம் தேதியன்று நாரி சக்தி புரஷ்கர் விருதானது வழங்கப்படும்.
மேலும் அன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பெண் காவலர்களுக்கான சர்வதேச மகளிர் தின மாநாடும் நடத்தப்பட உள்ளது.